எல்பிஜி எரிவாயுவுடன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு டேங்கர்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி பயணித்து வருகின்றன. இக்கப்பல்களுக்கு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.

ஜக் வசந்த் மற்றும் பைன் காஸ் என அடையாளம் காணப்பட்ட இந்த கப்பல்கள் தற்போது ஓமன் வளைகுடாவில் உள்ளதாகவும், அருகருகே பயணிப்பதாகவும் துறைமுகங்களுக்கான சிறப்பு செயலர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களிலும் சேர்த்து 92,612 டன் எல்பிஜி இருப்பதாக அவர் கூறினார். ஈரானின் லாரக் மற்றும் குயிஷம் தீவுகள் வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை இவை கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டேங்கர்கள் மார்ச் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முறையே 33 மற்றும் 27 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய கப்பல்கள் முன்பு 92,712 டன் எல்பிஜியுடன் இந்தியா வந்தடைந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.