அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் ஷியா முஸ்லிம் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக கூறப்பட்டதை கண்டித்து, பாகிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், ஷியா முஸ்லிம்கள் சுமார் 20% அளவில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சூழலில், ராவல்பிண்டியில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், “ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்கு செல்லுங்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு பாகிஸ்தான் ஷியா மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முனீர் தங்கள் சமூகத்தை அவமதித்ததாகவும், ராணுவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வேலைக்காரன் போல செயல்படுகிறது எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.