அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே.)க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இபிஎஸை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், ஐ.ஜே.கே.க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். எந்த தொகுதிகள் மற்றும் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், இது குறித்து இன்று மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.




