சென்னை: வரவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், ஒன்பது கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 59 தொகுதிகளில் அந்தக் கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன.

மீதமுள்ள ஏழு தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இதில் ம.தி.மு.க. மூன்று தொகுதிகள், ம.ம.க. இரண்டு தொகுதிகள், கொ.ம.தே.க. இரண்டு தொகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சொந்த சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். சிறு கட்சிகளுக்கான ஒதுக்கீடு முடிந்த பின், தி.மு.க. மட்டும் எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 182 பேர் போட்டியிட்டனர். அதில் 173 பேர் தி.மு.க. வேட்பாளர்கள்; மீதமுள்ள ஒன்பது பேர் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.