சென்னை: தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில், தி.மு.க. அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகள் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை மற்றும் டி.ஆர்.பி. ராஜாவின் மன்னார்குடி ஆகிய தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பெரியகருப்பனின் திருப்பத்தூர், அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர், மனோ தங்கராஜின் பத்மநாபபுரம், நாசரின் ஆவடி, வேலுவின் திருவண்ணாமலை ஆகிய ஐந்து அமைச்சர்களின் தொகுதிகளும், சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.