தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜ தேர்தல் அறிக்கை இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்குப் பிறகு அவர் இந்த தகவலை கூறினார்.
கூட்டத்திற்கு பாஜ அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், கமிட்டி கூடி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வோம் என்றும், அதன் பின்னர் இரு தினங்களில் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் பாஜ வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டில்லியிலிருந்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.




