பிரிட்டனைச் சேர்ந்த QS (Quacquarelli Symonds) நிறுவனம் வெளியிட்ட 16வது ஆண்டு பாடவாரியான உலக பல்கலை தரவரிசையில், இந்திய கல்வி நிறுவனங்களின் பல பாடங்கள் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த தரவரிசைக்காக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 1,900 பல்கலைகளின் 21,000க்கும் அதிகமான நடைமுறை பாடத்திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் மற்றும் மருத்துவம், கலை மற்றும் மனிதவியல் உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 12 பல்கலைகளின் 27 பாடங்கள் டாப் 50-இல் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டு இதே பட்டியலில் 12 பாடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் ஐ.ஐ.எம். ஆமதாபாத் 21வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஐ.ஐ.டி. டில்லி ஆறு பாடங்களில் டாப் 50 இடங்களைப் பெற்றுள்ளது. மேலும் சென்னை, கரக்பூர், மும்பை ஆகிய ஐ.ஐ.டி.கள், ஜவஹர்லால் நேரு பல்கலை (ஜே.என்.யு.) மற்றும் பிட்ஸ் பிலானி ஆகியவற்றின் பாடங்களும் தத்தமது பிரிவுகளில் உலகின் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.




