உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மார்ச் 27 அன்று ராம நவமி விழா கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமர் கோவிலில் தரிசனம் செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளின்போது, ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றிப் பகுதியில் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாகப் பட்டு, திலகம் இட்டதுபோல் ஒளிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஜன்ம ஆரத்தி நேரத்தில் ‘சூரிய திலகம்’ என அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில், ராம்லாலாவின் நெற்றியில் சூரிய கதிர்கள் ஒளிரும் காட்சி காணப்பட்டது. பெருந்திரளான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ராமர் ஜன்மோத்சவ் கொண்டாட்டங்கள் அயோத்தி நகரம் முழுவதும் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.




