2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை வென்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் பெற்றுள்ளதாக கூறினார். தென்காசி மற்றும் விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் விதிவிலக்காக உள்ளதாகவும், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையால் சில இடங்களில் மாற்றம் ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்பே காங்கிரஸ் போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசமாகியுள்ளதாக கூறினார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதில் ஒரு ‘சிட்டிங்’ தொகுதியை விடுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வேட்பாளர் தொடர்பான பிரச்னை இருப்பதாகவும், அதை முதல்வரிடம் பேசி தீர்ப்பதாகவும் கூறினார்.

மேலும், இடைத்தேர்தல் மூலம் திமுக வசமான ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது காங்கிரஸ் வசமாகியுள்ளது என்பதையும் அவர் குறிப்பிடத்தக்கதாக சுட்டிக்காட்டினார்.