அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், ஈரான் தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாசகங்களில் ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை காட்டும் புகைப்படத்தை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், 10 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாகவும், அதே நேரத்தில் மேற்காசியாவுக்கு கூடுதலாக 10,000 வீரர்களை அனுப்ப பென்டகன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதித்து வருவதாகவும், எதிரி நாடுகளின் கப்பல்கள் அல்லது முறையான அனுமதி இல்லாமல் வரும் கப்பல்களை தாக்குவதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு இந்திய மக்கள் உதவிக்கரம் நீட்டிவருவதாகவும், போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடியும் குரல் கொடுத்து வருவதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.