வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து களமிறங்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சி வலுவாக உள்ள சுமார் 120 தொகுதிகளில் இருந்து, வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படும் 60 முதல் 70 தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கிருஷ்ணசாமி கூறினார்.
வேட்பாளர் பட்டியல் மார்ச் 29-ம் தேதி சென்னையில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




