சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. பிரசாரத்தை கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்.2ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
தி.மு.க. ‘உதய சூரியன்’ சின்னத்தில் 175 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் முதற்கட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ஏப்.3 காலை ஜெயங்கொண்டத்திலும் மாலை திருவெறும்பூரிலும் அவர் பேச உள்ளார். ஏப்.4 காலை கரூர், மாலை திருப்பூர்; ஏப்.5 காலை நாகர்கோவில், மாலை திருநெல்வேலி என தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏப்.6ம் தேதி சென்னையின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஏப்.21 வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் தொடரும் நிலையில், இறுதி நாளான ஏப்.21 காலை ஸ்ரீபெரும்புதூரிலும் மாலை கொளத்தூரிலும் பயணம் செய்து பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.




