சென்னை: அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாக இழுபறியாக நீடித்ததால், ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகள் முன்னேறி வந்தன.
வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டின்படி, காங்கிரஸ் 28, தேமுதிக 10, விடுதலை சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்டிபிஐ 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த தொகுதி வாரியான பட்டியலை திமுக எம்பி டி.ஆர். பாலு வெளியிட்டார்.




