புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்ட ‘இரட்டை இன்ஜின்’ என்டிஏ கூட்டணி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மீண்டும் என்டிஏ அரசையே மக்கள் தேர்வு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக இணைந்து போட்டியிடுகின்றன; தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மேலும், ‘எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி – புதுச்சேரி’ என்ற நிகழ்ச்சியில் மார்ச் 30 மாலை 5.30 மணிக்கு பங்கேற்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் எனவும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.




