2026 சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சி அறிவித்துள்ளது.

கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக மதுரை மத்திய தொகுதி இருப்பதாகவும், அதில் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர் விவரங்கள் குறித்து பாஜ சார்பில் வரும் திங்கள் கிழமை அறிவிப்பு வெளியாகும் என்றும், அதன்பின் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுந்தர் சியின் மனைவி நடிகை குஷ்பு பாஜவில் உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளதாகவும், 2021 தேர்தலில் இங்கு போட்டியிட்ட அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெற்றதாகவும் அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.