சென்னை: தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை சோதனைகளில், ரூ.273 கோடி மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நேற்று காலை நிலவரப்படி, ரூ.44.8 கோடி ரொக்கம் மற்றும் ரூ.93 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரூ.7.60 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.116 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பொருட்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்ததாக கூறப்படும் ரூ.104 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.273 கோடி என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.




