ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) வெளியிட்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து சந்தானகிருஷ்ணன் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். அவர் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் உறுதியானதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமடையும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.




