சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ.) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், இ.கம்யூ. 5 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, தளி தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதிக்கு மாரிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) தொகுதிக்கு மகாலிங்கம், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ரவி, பவானிசாகர் (தனி) தொகுதிக்கு பி.எல். சுந்தரம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.