புதுடில்லி: ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை செயல்படுத்த தவறும் ஒதுக்கீடுதாரர்களுக்கு (உரிமையாளர்கள்) சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பார்லிமென்டில் தெரிவித்ததாவது, இதுவரை தீர்ப்பாய உத்தரவுகளை பின்பற்றாத நிலையில் சிறை தண்டனை விதிக்கும் நடைமுறை இருந்தது.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின் படி, அந்த தண்டனை அபராதமாக மாற்றப்படும். ஒதுக்கீடுதாரர் வாங்கியுள்ள வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு அல்லது கட்டடத்தின் மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த மாற்றம் ‘ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா – 2026’ மூலம் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.