வி டுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) தலைவர் திருமாவளவனின் தந்தை பெயர் ராமசாமி. 2002ஆம் ஆண்டு, ஜாதி மற்றும் மத குறியீடுகள் இல்லாத பெயர்களை கட்சியினர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தன் தந்தையின் பெயரை ‘தொல்காப்பியன்’ என மாற்றியதுடன், அவர் ‘தொல். திருமாவளவன்’ என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பெயரை பயன்படுத்தும் முறையில் மீண்டும் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த அவரது ஆஸ்தான ஜோதிடர், ‘தொல்’ என்ற முன்னொட்டு இருந்தால் தொல்லை ஏற்படும் என கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து ‘தொல்காப்பியன் திருமாவளவன்’ என பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக அவர் ‘தொல்காப்பியன் திருமாவளவன்’ என கையெழுத்திடத் தொடங்கியுள்ளதாகவும், டிசம்பர் வரை பல்வேறு நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் யாரையும் விமர்சிப்பதையும் புறம் பேசுவதையும் தவிர்க்குமாறு ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது.