கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை, கரூர் தொகுதிக்கான கட்சி வேட்பாளராக தவெக அறிவித்துள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்து வருகிறது.
வழக்கில் பல கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்டாலும், அப்போது மாவட்ட செயலாளராக இருந்த மதியழகன் மற்றும் இன்னொரு நிர்வாகி மட்டுமே கைது செய்யப்பட்டதாக செய்தி தெரிவிக்கிறது. தற்போது மதியழகன் ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் தொகுதியில் போட்டியிட மதியழகனுக்கு விஜய் வாய்ப்பு அளித்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




