சென்னையில் மார்ச் 31 அன்று தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனையாகிறது. கிராம் விலை ரூ.100 குறைந்து ரூ.13,670 ஆக உள்ளது.

வெள்ளி விலையும் இன்று குறைந்தது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250 ஆகவும், கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ.2.50 லட்சமாகவும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கம், வெள்ளி விலைகள் ஏற்றத் தாழ்வுடன் நகர்ந்து வருகின்றன. மார்ச் 28 அன்று ஆபரண தங்கம் கிராம் ரூ.13,660-க்கும், சவரன் ரூ.1,09,280-க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் ரூ.250 ஆக இருந்தது.

மார்ச் 30 அன்று காலை தங்கம் குறைந்த நிலையில் இருந்தாலும், மாலை நேரத்தில் மீண்டும் உயர்வு கண்டது. மாலை நிலவரப்படி தங்கம் கிராம் ரூ.13,770-க்கும், சவரன் ரூ.1,10,160-க்கும் சென்றது; வெள்ளி கிராம் ரூ.255-க்கும், கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் உயர்ந்தது.

அந்த உயர்வுக்குப் பிறகு, மார்ச் 31 அன்று தங்கமும் வெள்ளியும் மீண்டும் சரிவடைந்துள்ளன.