நடிகர் விஜயை பார்க்க அவரது வீட்டைச் சுற்றி கூடும் கூட்டம் குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்தார். “திரையில் பார்த்த நடிகர் தெருவுக்கு வந்துள்ளார்; அதனால் பார்க்க மக்கள் வந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய சண்முகம், திமுக தேர்தல் அறிக்கை மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் நடைமுறைக்கு சாத்தியமானதும் முழுமையாக நிறைவேற்றக்கூடியதும் என பாராட்டினார். அந்த அறிக்கையை அவர் “சூப்பர் ஸ்டார்” எனவும் வர்ணித்தார்.

மேலும், இந்தியாவில் யாரும் சொல்லாத வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளதாகவும், முன்பை விட சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார்கள் வழங்கப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.

அரசுத் திட்டங்களால் பயன் பெற்ற மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றும், பல கட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்துள்ளன என்றும் அவர் விமர்சித்தார். திமுக 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறிய அவர், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.