கேரளாவில் ஆளும் இடதுசாரி மற்றும் பா.ஜ. இடையே “ரகசிய கூட்டணி” இருப்பதாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

கேரள சட்டசபையின் 140 தொகுதிகளுக்கும் ஏப். 9 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

தன் மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், மத்திய விசாரணை அமைப்புகள் 55 மணி நேரத்துக்கும் மேலாக தன்னை விசாரித்ததாகவும் ராகுல் கூறினார். ஆனால், சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் அல்லது ஆளுங்கட்சி தலைவர்கள் மீது அதேபோன்ற விசாரணை நடந்ததாக தெரியவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு வந்தபோதும் சபரிமலை விவகாரத்தில் பேசவில்லை என்றும் ராகுல் குறிப்பிட்டார். இவை இரு தரப்புகளுக்கும் இடையிலான புரிதலை காட்டுவதாக அவர் வாதிட்டார்.