சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்த முறை மாநிலத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், சுங்கக் கட்டண உயர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த கோரிக்கை தமிழகத்தில் உள்ள NHAI அதிகாரிகள் மூலம் டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது.