சென்னை: தேர்தல் கமிஷன் உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு புதிய பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவில், சென்னை மற்றும் சிறப்பு பிரிவுகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கண்ணன் சென்னை வெல்பேர் துணை கமிஷனராகவும், பாலகிருஷ்ணன் சென்னை தலைமையிட துணை கமிஷனராகவும், ஜோஷ் தங்கையா சென்னை பாதுகாப்பு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுஜாதா தீவிரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்பியாகவும், சண்முகம் க்யூ பிராஞ்ச் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜாராம் விஜிலன்ஸ் தென்பிரிவு எஸ்பியாகவும், மாதவன் சிபிசிஐடி மெட்ரோ எஸ்பியாகவும், அனிதா சென்னை நவீனமயம் பிரிவில் உதவி ஐஜி/எஸ்பியாகவும் பொறுப்பேற்க உள்ளனர்.

இவர்கள் முன்னதாக விருதுநகர், நாகை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பிகளாக பணியாற்றிய நிலையில், தேர்தல் கமிஷன் இடமாற்ற உத்தரவுக்குப் பிறகு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.