மேற்காசியப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பார்லிமென்டில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணத்தை விளைவிக்கும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் மேற்கு கரை பாலஸ்தீனர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
மேலும், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் 90 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதியும் இதில் இடம் பெற்றுள்ளது.
செய்திகளின்படி, நடந்த ஓட்டெடுப்பில் ஆதரவாக 62 ஓட்டுகளும் எதிராக 47 ஓட்டுகளும் பதிவானது.
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




