இந்தத் தேர்தலில் பா.ம.க நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸும், அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் சசிகலாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், மார்ச் 29 அன்று சசிகலா 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் மயிலாடுதுறைக்கு சுதாகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் நேற்று முன்தினம் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அந்தப் பட்டியலில் மயிலாடுதுறையில் பாக்கம் சக்திவேல் போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே தொகுதிக்கு இரு தரப்பும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், ராமதாஸ்–சசிகலா கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.




