குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து, உலக சந்தைக்கு ‘சிப்’ வழங்கும் நம்பகமான நாடாக இந்தியா வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
ஆமதாபாத் அருகே சானந்தில் அமைந்துள்ள ‘கேன்ஸ் செமிகான்’ நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அவர் தொடங்கி வைத்தார். இந்த ஆலை மூலம் இந்தியா உலக செமிகண்டக்டர் வினியோகத் தொடரில் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.
2021-ல் உலகளவில் செமிகண்டக்டர் பற்றாக்குறை ஏற்பட்ட சூழலில், அரசு செமிகண்டக்டர் தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மோடி நினைவூட்டினார். அது வெறும் தொழில் கொள்கை அல்ல; இந்தத் துறையில் நாட்டின் உறுதியை வெளிப்படுத்தும் முயற்சியாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், உற்பத்தித் துறைகளில் தன்னிறைவை வலுப்படுத்த சமீபத்திய பட்ஜெட்டில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். குஜராத் ஆலையின் உற்பத்தி, உலக சந்தைக்கு செமிகண்டக்டர் வழங்கும் நம்பகமான நாடு என்ற இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.




