சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்பாடு மற்றும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தினமலர்–சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இந்த கருத்துக்கணிப்பு மார்ச் மாதத்தில் 70 தொகுதிகளில் 19,305 பேரிடம் நடத்தப்பட்டது. பங்கேற்றவர்களில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 20%, 25 முதல் 50 வயது வரை 55%, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 25% என தெரிவிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணி 42%, அதிமுக கூட்டணி 31%, பாஜ கூட்டணி 11%, நாதக 7% என பதிலளித்ததாக கணிப்பு கூறுகிறது.
மத்திய அரசின் செயல்பாடு குறித்து 32% பேர் “சூப்பர்”, 48% பேர் “பரவாயில்லை”, 20% பேர் “மோசம்” என மதிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடு “சூப்பர்” 35%, “மோசம்” 20%, “கருத்தில்லை/பரவாயில்லை” 45% என பதிவாகியுள்ளது. ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச விஷயங்களை மோடி அரசு கையாளும் விதம் குறித்து 36% பேர் “சூப்பர்”, 17% பேர் “மோசம்”, 47% பேர் “தெரியவில்லை” என கூறியுள்ளனர்.
திமுக அரசின் செயல்பாடு “சூப்பர்” 20%, “பரவாயில்லை” 39%, “மோசம்” 41% என வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு “சூப்பர்” 23%, “பரவாயில்லை” 40%, “மோசம்” 37% எனவும், துணை முதல்வர் உதயநிதி செயல்பாடு “சூப்பர்” 16%, “பரவாயில்லை” 39%, “மோசம்” 45% எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து 59% பேர் “மோசம்”, 32% பேர் “பரவாயில்லை”, 9% பேர் “சூப்பர்” என மதிப்பிட்டுள்ளனர். யார் வெற்றி பெறுவார்கள் உள்ளிட்ட பிற கேள்விகளுக்கான முடிவுகள் ஏப். 5 அன்று வெளியாகும் என கணிப்பு தெரிவித்துள்ளது.




