சென்னை: தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை பொதுமக்கள் ஆன்லைனில் அறிய தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், ECINET உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவை தளங்களில் ஒன்றாக செயல்படுகிறது என்றும், 40க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
ECINET வழியாக வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், விண்ணப்ப நிலை கண்காணிப்பு, தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுதல், ஓட்டுச்சாவடி அலுவலர்களை சந்திக்க முன்பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், தொகுதி வாரியாக வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துகள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள், அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களும் இதில் கிடைக்கும்.
‘உங்கள் வேட்பாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ பகுதியை பயன்படுத்தி இந்த விவரங்களை பார்க்கலாம்; வேட்பாளர்கள் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரங்களையும் பதிவிறக்கம் செய்யலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




