நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் பிரசாரத்தின் போது ஏற்பட்ட ‘டங் ஸ்லிப்’ காரணமாக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடும் அவர், வட சென்னையில் தி.மு.க. எதிராக மக்கள் மனநிலை மாறிவிட்டதாக கூறினார். ஆனால் தொடர்ந்து, சென்னையின் 16 தொகுதிகளில் 13 இடங்களில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என சொல்லி விட்டார்.
த.வெ.க. என்று சொல்ல வேண்டிய இடத்தில் தி.மு.க. என தவறுதலாக கூறியதால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட அவர், பின்னர் தி.மு.க.வை விமர்சித்து பேசத் தொடங்கினார்.
ஆனால் அந்த கருத்தை திருத்தி சொல்லவோ, வருத்தம் தெரிவிக்கவோ அவர் முன்வரவில்லை. இதையடுத்து, அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரது நண்பர் கார்த்திக் மோகன் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, ‘வெற்றியை அவருக்கே கொடுத்து விட்டாரா’ என சமூக வலைதளங்களில் கிண்டல் பதிவுகள் பரவி வருகின்றன.




