தி.மு.க. தனது புதுப்பொலிவுடன் வெளியிட்ட தேர்தல் பிரச்சார பாடல் வீடியோவில், ஹிந்தி திணிப்பு மற்றும் நீட் எதிர்ப்பு தொடர்பான வரிகளை நீக்கியுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரியில் தி.மு.க. பிரச்சார பாடலை வெளியிட்டிருந்தது.

அந்த பாடலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் புதிய வடிவமைப்புடன் மீண்டும் வெளியிட்டார். ஆனால், புதிய வீடியோவில் ஹிந்தி திணிப்பு அல்லது நீட் எதிர்ப்பு குறித்து எந்த வரியும் இடம்பெறாததால், தி.மு.க. தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டபோது, பழைய வீடியோவில் அந்த வரிகள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அவை எடுபடாது என்றும், வாக்குகள் குறைய வாய்ப்பும் இருப்பதாகவும் கருதி அவற்றை நீக்கி வீடியோவை மறுவெளியீடு செய்ததாக தி.மு.க. தரப்பினர் தெரிவித்தனர்.