சென்னையில் முன்னாள் சட்டசபை சபாநாயகர் தனபாலை அவரது இல்லத்தில் சந்தித்து, அவிநாசி தொகுதி பாஜ வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் ஆசி பெற்றார்.
சமூகவலைதளப் பதிவில், 2026 சட்டசபைத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதைக் கருத்தில் கொண்டு, அதிமுக மூத்த தலைவரும் அந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான தனபாலை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவூர் வேலுச்சாமி உடனிருந்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
சமீபத்தில் தனபால் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவில் தமக்கு சீட் வழங்கப்படவில்லை என்றும், அதைப்பற்றி யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும், உடல்நலக்குறைவாக இருந்தபோது கட்சியினர் யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்த தனபாலின் மகன் லோகேஷ், ராசிபுரம் தொகுதியில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




