பக்கவாதத்திலிருந்து மீண்டு வரும் ராஜா, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சென்னையில் அவரை சந்தித்து பேசினார் என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல். அங்கு தான் ராஜா பிரதமரை சந்தித்து உரையாடினார்.
சந்திப்பின் போது ராஜாவின் உடல்நலம் மற்றும் சிகிச்சை குறித்து மோடி அக்கறையுடன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் விசாரித்த மோடி, சட்டசபை தேர்தல் முடிந்ததும் ‘நல்ல செய்தி’ வரும் என ராஜாவிடம் கூறியதாக பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்; இதனால் ராஜா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.




