பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) ராமதாஸ்–அன்புமணி என இரு பிரிவுகளாக ஏற்பட்டுள்ள பிளவு மேலும் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட ஒரு வேட்பாளர், அன்புமணி அணியில் இணைந்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் தேர்தலுக்காக இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்ற நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இரு அணிகளுக்கும் நேரடி மோதலாக மாறியது. அன்புமணி தரப்பில் மயிலம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. சிவக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராமதாஸ் அணியில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், புகழேந்தி சென்னையில் அன்புமணியை சந்தித்து அவரது அணியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.