ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதி “மிக விரைவில்” மீண்டும் இந்தியாவுடன் இணையும் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், PoK பகுதியில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புவதாகவும், மக்களின் கருத்தை வெளிப்படுத்த கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் கூறினார்.
காஷ்மீரில் காணப்படும் வளமும் வளர்ச்சியும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் பல மாற்றங்களை கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா அதிகரித்துள்ளதாகவும், ஒருகாலத்தில் கல்லெறிவில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது கல்வியில் கவனம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



