ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுக்கூட்டம் முடிந்த பின் கட்சி நிர்வாகி வழங்கிய ‘வேல்’ பரிசை வாங்காமல் திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வு அரண்மனை பகுதியில் நேற்று இரவு ஓட்டு சேகரிப்பின்போது நடந்தது. உரை முடிந்ததும் கட்சி நிர்வாகிகள் பரிசுப் பொருட்களை வழங்க முன்வந்தனர்.
அதில் ஒருவர் ‘வேல்’ வழங்கியபோது, உதயநிதி அதை எடுத்துக் கொண்டு உடனே அவரிடமே மீண்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த நிமிடமே மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும், அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
இந்த மாறுபட்ட அணுகுமுறை அங்கு இருந்த சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வந்தபோது, அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.




