கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் த.வெ.க. மூன்றாவது முறையாக வேட்பாளரை மாற்றியதால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைவர் நடிகர் விஜய் முதலில் மஞ்சுநாத்தை வேட்பாளராக அறிவித்தார். பின்னர் அவர் போட்டியிலிருந்து விலகியதால், அம்பரீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் கடைசி நேரத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலர் வேந்தர்க்கரசன் (வடிவேல்) த.வெ.க. வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மாற்றத்தின் பின்னணியில் சமீபத்தில் கட்சியில் இணைந்த சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மது ஹேம்நாத் அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ச்சியான மாற்றங்களும் குழப்பங்களும் கிருஷ்ணகிரி த.வெ.க.வில் ஒரு தரப்பினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வேட்புமனு தாக்கலுக்கு முன்பே இவ்வாறு குழப்பம் உருவானது, கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு அரசியல் அனுபவம் குறைவாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




