குழந்தைகள் சளி பிடித்தால் விசில் ஊதினால் சளி நின்று போய்விடும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
இந்த கருத்தை அவர் நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது தெரிவித்ததாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர் “விசில்” சின்னத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
வீடியோவில், சிறு குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால் விசில் ஊதினாலே போதும்; அது மூச்சுப் பயிற்சி போல உதவும் என அவர் கூறுகிறார். மேலும், முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்யத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சு இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்; வீடியோக்கு கலவையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் பதிவாகியுள்ளன.




