தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரிதவிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்செந்தூரில் அவர் தொடர்ந்து ஏழாவது முறையாக போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு கள்விளை கிராமத்திற்கு பிரசாரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது பிரசார வாகனத்தை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கோட்டூர் பகுதியில் சென்ற அவரது பிரசார வாகனத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். அமைச்சரின் சமாளிப்பை ஏற்காத மக்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அந்த பகுதியில் பிரசாரம் செய்யாமல் அவர் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். தொகுதிக்குள் ஓட்டு சேகரிக்க செல்லும் பல இடங்களிலும் இதுபோன்ற எதிர்ப்புகள் தொடர்வதாக தகவல் தெரிவிக்கிறது.