சென்னையின் திருவொற்றியூர் தொகுதிக்கான மா.கம்யூ. வேட்பாளராக சுந்தரராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுந்தரராஜ், மா.கம்யூ. மாநில செயலர் சண்முகத்துடன் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார்.
சுந்தரராஜ் வெற்றிக்கு கமல் தனது வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சந்திப்பின்போது, மா.கம்யூ. கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளில் கமலுக்கு ஆர்வம் இருப்பதை நினைவூட்டி, கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருமாறு சண்முகம் கேட்டுக் கொண்டார்.




