திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின், வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குடும்பத்தின் சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதில், லீமா ரோஸ் மார்ட்டின் பெயரில் நகை உள்ளிட்ட அசையும் சொத்துகள் ரூ.139 கோடி மதிப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள் ரூ.909 கோடி மதிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே ஆவணத்தில், அவரது கணவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் பெயரில் நகை உள்ளிட்ட அசையும் சொத்துகள் ரூ.3,262 கோடி மதிப்பிலும், கட்டிடங்கள் மற்றும் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் ரூ.887 கோடி மதிப்பிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மகன் ஜோஸ் டைசன் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேர்த்து ரூ.662 கோடி மதிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாணப் பத்திரத்தில் வெளியான கணக்குகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லீமா ரோஸ் மார்ட்டின் இருப்பதாக செய்தி குறிப்பிடுகிறது.



