மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தொடர்பாக பா.ஜ. “ரகசிய உடன்பாடு” வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
நாடியா மாவட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவர் இதை தெரிவித்தார். 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் பா.ஜ. நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், லோக்சபா தேர்தலின்போது வாக்காளர் பட்டியலை திருத்தாத பா.ஜ., சட்டசபைத் தேர்தலின்போது மட்டும் முறைகேடுகள் உள்ளதாக கூறி திருத்தம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிந்ததும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாகவும் தெரிவித்தார்.
மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலுக்கும் திரிணமுல் கட்சிக்கும் தொடர்பில்லை என கூறிய மம்தா, அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட நபரை கைது செய்த ஐ.பி.எஸ். அதிகாரியை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக அனுப்பியதாகவும், திறமையான அதிகாரிகளை இங்கே பணியாற்ற விடுவதில்லை என்றும் கூறினார்.




