சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி நியமித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.க.) இடம்பெற்றுள்ள பா.ஜ.க., இந்த தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் மாநில பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்ளிட்டோர் வேட்பாளர் சீட்டை எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு உதவியாகவும், கூட்டணி கட்சியினருடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அந்த பட்டியலில் சீட் கிடைக்காதவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நியமனங்களில் தளி தொகுதிக்கு ராமலிங்கம், திருவண்ணாமலைக்கு டால்பின் ஸ்ரீதர், ஆவடிக்கு வெங்கடேசன் மற்றும் பாஸ்கர், மதுரை தெற்குக்கு ராகவன் ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொடக்குறிச்சி–கனகசபாபதி, வாசுதேவநல்லூர்–பால் கனகராஜ், அறந்தாங்கி–கார்த்தியாயினி, மயிலாப்பூர்–பிரமிளா சம்பத் மற்றும் சதீஷ்குமார், ராசிபுரம்–கே. வெங்கடேசன், கந்தர்வகோட்டை–நாச்சியப்பன், தஞ்சை–நாகராஜ், திருப்பூர் தெற்கு–அர்ஜுனமூர்த்தி, சாத்தூர்–ராதாகிருஷ்ணன் மற்றும் நீலமுரளி யாதவ், திருச்செந்தூர்–உமாரதி உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




