மும்பை: மஹாராஷ்டிரா பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, சுனேத்ரா பவார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவர் எம்எல்ஏ ஆக இருந்த பாராமதி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அத்தொகுதியில் மாநில துணை முதல்வரும் அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார்.

தகவலின்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சாகன் புஜ்பால் மற்றும் தனஞ்செய் முண்டே ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுனேத்ரா பவாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், சுனேத்ரா பவார் போட்டியின்றி வெற்றி பெறும் நிலை உருவானது.