சென்னையில் இன்று (ஏப். 9) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,600 சரிந்து ரூ.1,12,000 ஆகவும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000 ஆகவும் விற்பனை நடைபெறுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் நாட்டில் தங்க விலை ஏற்றத் தாழ்வாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏப். 7 அன்று ஆபரண தங்கம் கிராம் ரூ.13,860-க்கும், சவரன் ரூ.1,10,880-க்கும் விற்கப்பட்ட நிலையில், வெள்ளி கிராம் ரூ.255 ஆக இருந்தது.
ஏப். 8 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200 ஆகவும், சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600 ஆகவும் விற்பனையானது. அதே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.265 ஆகவும், கிலோக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2.65 லட்சமாகவும் இருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 சரிந்து ரூ.260 ஆகவும், கிலோக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2.65 லட்சமாகவும் விற்பனை நடைபெறுகிறது.



