சிதம்பரத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர்கள் மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதலை மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100% வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏபிவிபி சார்பில் நடைபெற்றதாக தெரிவித்தார். அந்த கூட்டத்திற்குள் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துகளை எடுத்துச் சொல்லும் உரிமை அனைவருக்கும் இருப்பதாக கூறிய அவர், இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறிய எல்.முருகன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.



