ராஜ்யசபா துணைத்தலைவராக பணியாற்றிய ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு நியமன எம்.பி. பதவி வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஹரிவன்ஷ் 2022 ஆகஸ்ட் 11 முதல் ராஜ்யசபா துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தார். அவர் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சியைச் சேர்ந்தவர்; பீஹார் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.

அவரது பதவிக்காலம் ஏப்.9 அன்று நிறைவடைந்தது. கட்சி சார்பில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆகும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், நியமனத்தின் மூலம் அவர் மீண்டும் ராஜ்யசபாவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் துணைத்தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.