தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 13ல் ஆன்லைனில் கலந்துரையாட உள்ளார்.

இந்த உரையாடல் ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிப்பதே இதன் நோக்கமாக கூறப்படுகிறது.

முன்னதாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் பொறுப்பாளர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய பா.ஜ. அரசின் திட்டங்களை விளக்க வேண்டும் என தமிழக பா.ஜ. நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமோ செயலி மூலம் நடைபெறும் இந்த ஆன்லைன் கலந்துரையாடல் ஏப்ரல் 13 காலை 11.00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பிரதமருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.